யாழிலும் ஓய்வூதியர்களுக்கு இராணுவத்தினரால் பேருந்து ஏற்பாடு!

நாடளாவிய ரீதியில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு இன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனைத்து வங்கிகளும் இன்று (வியாழக்கிழமை) திறக்கப்பட்டு இராணுவத்தின் உதவியுடன் ஓய்வூதியம் பெறுவோரை பேருந்தில் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்தவகையில், யாழ்ப்பாணத்திலும் இவ்வாறு ஓய்வூதியம் பெறுவோர் வங்கிகளுக்கு அழைத்துவரப்பட்டு மீண்டும் இராணுவத்தினரால் பேருந்துகளில் அழைத்துச்செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் ஓய்வூதியர்கள் மருந்து உட்பட் அத்தியவசியப் பொருட்களை கொள்வனவுசெய்யும் பொருட்டு மருந்தகங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.