சிங்கப்பூரில் வசிக்கும் மூன்று இலங்கையர்களுக்கு கொரோனா!

சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த மூவருக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிங்கபூர் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த இலங்கையர் மூவரும் 33, 37 மற்றும் 44 வயதுடையவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

குறித்த மூவரும் சிங்கப்பூரில் வேலை செய்து வந்தவர்கள் எனவும் கூறப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.