தனிமைப்படுத்தப்பட்டிருந்த 195 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு!

கண்காணிப்பு நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 195 பேர் இன்று(வியாழக்கிழமை) வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

தியத்தலாவை, ரம்பேவ மற்றும் பம்பைமடு கண்காணிப்பு நிலையங்களில் தனிமைப்பட்டிருந்தவர்களே இவ்வாறு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வௌிநாடுகளிலிருந்து வருகைதந்து வவுனியா – பம்பைமடு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட 45 பேரும் இதில் அடங்குகின்றனர்.

இத்தாலியிருந்து நாட்டிற்கு திரும்பிய குறித்த நபர்கள் 14 நாட்கள் பம்பைமடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

2,314 பேர் இதுவரை கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.

1,631 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பிலுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.