மன்னாரிலும் சிரேஷ்ட பிரஜைகள் ஓய்வூதியம் பெறும் நடவடிக்கைக்கு இராணுவம் உதவி!

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைவாக ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளும் சிரேஷ்ட பிரஜைகள் தங்களுடைய ஓய்வூதியப் பணத்தை வங்கிகளில் இருந்து பெற்றுக் கொள்வதற்காக விசேட ஏற்பாடுகளை இன்று (வியாழக்கிழமை) முதல் இராணுவத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மன்னார் மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறும் சிரேஷ்ட பிரஜைகள் விசேடமாக ஒழுங்குசெய்யப்பட்டு அரச பேருந்துகளில் பிரத்தியோக பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக வங்கிகளுக்கு அழைத்துவரப்பட்டனர்.

இவ்வாறு, மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் சேர்ந்த ஓய்வூதியர்கள் இன்றைய தினம் வங்கி கணக்குகள் உள்ள வங்கிகளில் தமது ஓய்வூதியங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை, ஓய்வூதியம் பெற வருகை தரும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு விசேட ஒழுங்குகள் வங்கிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அழைத்துவரப்பட்டவர்கள் ஓய்வூதியப் பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் அவர்களை அவர்களுடைய வீடுகளுக்கு பாதுகாப்பான முறையில் இராணுவத்தினர் மீண்டும் அழைத்துச்சென்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.