யாழில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 6 பேருக்கும் தொற்று இல்லை!

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் தங்கியிருக்கும் 6 பேருக்கு இன்று (புதன்கிழமை) கொரோனா குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் COVID-19 வைரஸ் பரிசோதனையில் அவர்கள் ஆறு பேருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை,  யாழ். மாவட்டத்தில் நேற்று புதிதாக 3 நோயாளர்கள் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ள நிலையில் சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகியிருந்தவர்களில் மேலும் 10 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்திருந்தார்.

யாழ். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.