மானிப்பாய் பகுதியில் விசேட தொற்று நீக்கல் நடவடிக்கை!

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் வசிக்கும் மதபோதகர் ஒருவருக்கு கொரோனா இருப்பதாக நேற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அப்பகுதியில் கிருமி தொற்று நீக்கம் செய்யும் பணிகள் இடம்பெற்றன.

வலி. தென்மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் இத்தொற்று நீக்கும் பணிகள் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றன.

இப்பிரதேசத்தில் உள்ள எட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த 34 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களின் வீடுகளுக்கும் மானிப்பாய் பகுதியில் உள்ள வங்கிகள், சந்தைகள் போன்ற பொது இடங்களிலும் தொற்று நீக்கும் பணிகள் இடம்பெற்றன.

இப்பணிகளில் வலி. தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபநேசன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், சுகாதாரப் பரிசோதகர்கள் ஈடுபட்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.