தகுதியற்றவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரத்தை தகுதியற்றவர்களுக்கு வழங்கும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளமை தொடர்பாக அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியவசிய தேவைகளுக்காக மாத்திரம் ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரத்தை தவறாகப் பயன்படுத்துதல், அனுமதிப்பத்திரத்தின் மூலம் வேறு நபர்களை வாகனங்களில் ஏற்றிச்செல்லல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண எச்சரித்துள்ளார்.

அத்துடன், ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரமின்றி நடமாடுபவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.