கொரோனா வைரஸ் எதிரொலி- சமூர்த்தி பயனாளிகளுக்கு பழுதடைந்த பொருட்கள் வழங்கிய சம்பவம்

சந்திரன் குமணன்
அம்பாறை.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக  வாழ்வாதாரங்களை இழந்துள்ள சமூர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட அத்தியவசிய பொருட்கள் பழுதடைந்து காணப்ப்பட்டதனால் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஊரடங்கு சட்டத்தினால் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கு  உப பிரதேச செயலக பிரிவில் உள்ளடங்குகின்ற பெரிய நீலாவணை பகுதியில் உள்ள இரு வேறு தொடர்மாடிகுடியிருப்பில் உள்ள வறிய மக்களுக்கே இப்பொருட்கள் சமூர்த்தி உத்தியோகத்தர்களின் மேற்பார்வையின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த புதன் கிழமை(1) மதியம் இவ்வத்தியவசியப் பொதிகள்  அப்பகுதிமக்களுக்கு ரூபா 600க்கு  விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன் இப்பொதியின்  விநியோக சேவைக்கு 20 ரூபா வீதம் அறவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்பட்ட குறித்த பொதியில் கோதுமை மா நெத்தலி பெரிய வெங்காயம் உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்கள் காணப்பட்டுள்ளதுடன்  பெரிய வெங்காயம் நெத்தலி உருளைக்கிழங்கு மனித பாவனை பயனற்ற நிலையில் பழுதடைந்து காணப்பட்டன.

பணம் கொடுத்து வாங்கப்ட்ட இப்பொருட்கள் மிகவும் பழுதடைந்து   காணப்பட்ட இப்பொருட்களை   பணம் கொடுத்து வாங்கிய மக்கள் அதனை கழிவுப்போருட்கள் வீசும் பகுதிக்கு எறிந்திருந்தனர்.

இப்பொருட்கள் யாவும் சாய்ந்தமருது பகுதியில் பொதி செய்யப்பட்டுள்ளதுடன் சமூர்த்தி திணைக்களத்தின்  அணுசரனை ஊடாக    வேலைத்திட்டத்தின் கீழ்  கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின்   ஊடாக இரு வேறு பகுதியில் அமைந்துள்ள  பெரியநீலாவணை தொடர்மாடி வீட்டுத்திட்டத்தில்  உள்ள 100பேருக்கும் அதிகமான  மக்களுக்கு  விற்பனை செய்யப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பாக  பிரதேச செயலாளர் ரி.ஜெ. அதிசயராஜ் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது  குறித்த விடயம் தொடர்பாக முறைப்பாடு தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் உரிய அதிகாரிகளுக்கு அதனை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.