கொரோனா தடுப்பிலிருந்து சனிக்கிழமை விலகுவோம்! – அரசுக்கு பொது சுகாதார பரிசோதகா்கள் சங்கம் எச்சரிக்கை
அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்காதுவிட்டால் எதிர்வரும் 4ஆம் சனிக்கிழமை முதல் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைப் பணிகளில் இருந்து தாம் விலகவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகா்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
பாதுகாப்பு அங்கிகள் மற்றும் உபகரணங்கள், உணவு, போக்குவரத்துச் சேவைகள் வழங்கப்படாதவிடத்து கொரோனா கட்டுப்பாட்டு வேலைத்திட்டப் பணிகளுக்கு எதிர்வரும் 4ஆம் திகதி முதல் பொது சுகாதார பரிசோதகா்கள் சமுகமளிக்கமாட்டார்கள் எனவும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா கட்டுப்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதகா்களுக்கு அடிப்படை பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படாமை குறித்து தொழிற்சங்கங்கள் கவலை வெளியிட்டுள்ளன.
கருத்துக்களேதுமில்லை