தமிழரசு கட்சியின் வவுனியா கிளையினரால் வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்க வைப்பு

கொறோணா வைரஸ் நோய் பரவுவதையடுத்து மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றாடம் தொழிலுக்கு சென்று வருமானத்தை ஈட்டும் வறுமைக்கோட்டுக்கு  உட்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வவுனியா மாவட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மாவட்ட கிளையினரால் வழங்க வைக்கப்பட்டது,
மாவட்ட கிளைத்தலைவரின் வழிகாட்டுதலின் கீழ் கட்சியின் உறுப்பினர்களால் நிவாரணப்பணி நடைபெற்று வருகின்றது, இதுவரையில் வவுனியா மாட்டத்தில் 1500 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்தெரிவிக்கப்பட்டுள்ளது. உலர் உணவுப்பொதியில் அடிப்படை உணவுகளான அரிசி, மா, சீனி, சோயாமீற், மீன்ரின் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளது.
கிடைக்கும் வளங்களைக்கொண்டு தொடர்ந்தும்  நிவாரணபணி நடைபெறுமென ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.