பச்சிலைப்பள்ளியில் யாழ்ப்பாணத்தவர்கள் உள்நுழையத் தடை!

கொரோனாத் தொற்று காரணமாக,  யாழ்ப்பாண மாவட்ட மக்கள் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தினுள் நுழைவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்று பிரதேச  செயலர் திருமதி ஜெயராணி பரமோதயன் தெரிவித்தார்.

பிரதேச செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால்,  அந்த நோய் பச்சிலைப் பள்ளிப் பிரதேசத்துக்கும் பரவாமால் தவிர்க்கும் வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள்  அச்ச சூழ்நிலை முடிவடையும் வரை பச்சிலைப்பளிப் பிரதேசத்துக்குள் வருவது தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்று பிரதேச செயலர் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில்  பளை  பொலிஸ்  நிலையப்  பொறுப்பதிகாரி,  கமநல சேவைகள் நிலையப் பெரும்பாக  அலுவலர்,   சுகாதார மருத்துவ அதிகாரி,  பணியக மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்  பிரிவுக்குட்பட்ட கிராம அலுவலர்கள்,   பிரதேச அலுவலர்கள்  கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.