இலங்கையில் 7 வெளிநாட்டவர்களை மறைத்து வைத்திருந்த மூவர்! யாழ்ப்பாணம் சென்று வந்ததாகவும் தகவல்

திருகோணமலை – நிலாவெளி சுற்றுலா வலயப் பகுதியில் உள்ள 3 ஹோட்டல்களில் 7 வெளிநாட்டவர்களை மறைத்து வைத்திருந்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

இந்த நிலையில் குறித்த ஹோட்டல்களின் உரிமையாளர்கள் உப்புவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உப்புவெளி பொலிஸார், குறித்த ஹோட்டல்களை நேற்று முன்தினம் இரவு சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது அங்கு 2 அமெரிக்க பிரஜைகள், 2 சீனப்பிரஜைகள், 1 பின்லாந்து பிரஜை, 1 ஸ்கொட்லாந்து பிரஜை மற்றும் 1 பிரித்தானிய பிரஜை என 7 வெளிநாட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அதே ஹோட்டல்களில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவருக்கு விசா அனுமதி காலாவதியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள் யாழ்ப்பாணம், அநுராதபுரம், ஹபரணை, நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களுக்கு சென்று வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்