களனி கங்கையின் நீரின் தூய்மை அதிகரிப்பு!

களனி கங்கையின் நீரின் தூய்மை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் எஸ் அமரசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸினால் நாட்டில் நிலவியுள்ள சூழ்நிலைக்கு அமைய தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளமையினால் களனி கங்கையினை அண்மித்து இயங்கி வருகின்ற தொழிற்சாலைகளின் கழிவுகள் கங்கையில் கலப்பதில்லை.

இதனாலேயே நீரின் தூய்மை தன்மை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுவலை மற்றும் கலுவெல ஆகிய பகுதிகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட நீர் மாதிரிகளை பரிசோதித்த போதே இந்த பெறுபேறு கிடைக்கப்பெற்றதாக கூறப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.