சிறுபோகச் செய்கை ஆரம்பம் – பாதுகாப்புப் படையினர்களுக்கு விவசாயிகள் நன்றி தெரிவிப்பு.

(எச்.எம்.எம்.பர்ஸான்)

ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில், விவசாய நடவடிக்கையில் எவ்விதத் தடையுமின்றி விவசாயிகள் ஈடுபட முடியும் என்ற அரசாங்கத்தின் அனுமதிக்கு அமைய,  விவசாயிகள் இவ்வாண்டிற்கான சிறுபோகச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெருவெட்டை, மூக்கற்றகல், ஜப்பார் திடல், தரைசேனை, வாகனேரி, வகுலாவலை ஆகிய பகுதிகளில் விதைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்திற்கு ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்ற பாதுகாப்புப் படையினர்களுக்கு, விவசாயிகள் நன்றிகளைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.