நோயாளிகளின் வருகை அதிகரிப்பு…

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக அண்மையில் வைத்தியசாலைகளில் நோயாளிகளின் வருகை குறைந்த அளவில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோன்று ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பிரதேச வைத்தியசாலையிலும் அண்மைக்காலமாக நோயாளிகளின் வருகை குறைந்த அளவில் காணப்பட்டிருந்தது. ஆனால்  புதன்கிழமை (1) ம் திகதி ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் அதிகளவிலான நோயாளர்கள் சிகிச்சை பெற வருகை தந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை தந்த நபர்களின் நோய்களை முன்கூட்டியே வைத்தியசாலை ஊழியர்கள்  கேட்டறிந்து ஒவ்வொருவிதமான நோயாளர்களுக்கும் பிரத்தியேக இடங்கள் ஒதுக்கப்பட்டன.

நோயாளர்களை பரிசோதித்த வைத்தியர்கள் கொரோனா தொற்றியின் அறிகுறிகள் தொடர்பில் விளக்கமளித்ததோடு, அவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய அதிகாரிகளிடம் அதனை அவசரமாக தெரிவித்து உடனடி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனைகளை வழங்கினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.