அம்பாறை மாவட்டத்தில் கனடா பாடுமீன் அமைப்பினால் உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு…

இலங்கையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தினக்கூலிக்கு வேலைக்கு செல்லும் குடும்பங்களில் உணவுத் தேவை மேலும் அதிகரித்துள்ளது. இதனை நிவர்த்தி செய்ய உலருணவுப் பொதிகள் மக்களுக்கு பல அமைப்புக்களால் இக் காலகட்டத்தில் வழங்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக மட்டக்களப்பு மாநகர பிரதேசம் மற்றும் அதற்கு வெளியில் உள்ள  பிரதேசங்களிலும் மக்களுக்கான உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் கனடா பாடுமீன் அமைப்பினால் 1000 குடும்பங்களுக்கான அரிசி பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது, இதில் மட்டக்களப்பு மாநகர பிரதேசத்தில் 300 குடும்பங்களுக்கும், கரடியனாறு பிரதேசத்தில் 200 குடும்பங்களுக்கும் அம்பாறை மாவட்டத்தில் 521 குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

அம்பாறை மாவட்டத்தில் ஆலயடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவிலும், திருக்கோவில் பிரதேச செயலக பிரிவிலும் உள்ள 521 குடும்பங்களுக்கு 900 ரூபாய் பெறுமதியான அரிசி பொதிகள் மற்றும் அதற்கான காசோலையினை குறித்த பிரதேச செயலகங்களுக்கு இன்று முதல்வர் தி.சரவணபவன் அவர்கள் விஜயம் செய்து வழங்கிவைத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.