மேலும் ஒருவர் வீடு திரும்பினார்…
இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மற்றொரு நோயாளி குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார் என்று சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் இனங்காணப்பட்ட 151 கொரோனா தொற்றாளர்களில் 22 பேர் குணமடைந்துள்ளனர். 4 பேர் பலியாகியுள்ளனர். ஏனைய 125 பேரும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேவேளை, நாட்டின் 30 வைத்தியசாலைகளில் 250 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை