கிளி. மாவட்ட நெல் இருப்பை உறுதிசெய்க! அரச அதிபருக்கு வேளமாலிதன் கோரிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தின் நெல் இருப்பை உறுதிப்படுத்துமாறு கோரிகிளிநொச்சி மாவட்ட அரச அதிபருக்கு கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் அவர்கள் அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்

அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது –
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பேரிடர் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்யா இவ்வேளை அரசாங்கத்தினுடைய அறிவிப்புக்களை மீறி அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை நாள் தோறும் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது . இந்நிலவரம் இன்றைய நிலையில் மிக மோசம் அடைந்திருப்பதுடன் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலவரம் காணப்படுகின்றது . விசேடமாக நெற்களஞ்சியமாக இருக்கக்கூடிய கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து நெல்பெருமளவு கொள்வனவு செய்யப்பட்டு பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லுவதற்கு அனுமதிக்கப்பட்டமையினால் சாதாரண அரிசி கிலோ ஒன்றின் விலை ரூபா 140 . 00 அதிகரித்துள்ளது . குறித்த விலை அதிகரிப்பிற்கு நுகர்வோர் ஆட்சேபனை தெரிவிக்கின்ற போது விஜிதா அரிசி ஆலை போன்ற பல பிற மாவட்ட உயர்நிலை நெல்வாணிபர்களினால் நெல் கொள்வனவு செய்யப்பட்டு வெளிமாவட்டங்களுக்கு எடுத்துசெல்லப்படுகின்றது . என அரிசியாலை உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றார்கள் . இந்நிலை தொடர்ந்தால் எதிர்வரும் நாட்களிலும் விலை அதிகரிக்கும் என்றும் இந்நிலை குறைவடையப்போவதில்லை என்றும் குறிப்பிடுகின்றார்கள் . மதிப்பிற்குரிய அரசாங்க அதிபர் அவர்களே , மேற்படி விடயம் தொடர்பான உண்மைத்தன்மையை ஆராய்வதுடன் கிளிநொச்சி மாவட்டத்தின் பாவனைக்கான நெல் எதிர்வரும் 06 மாத காலத்திற்கான இருப்பினை பேணுவதுடன் அரிசி ஆவது உத்தரவாத விலையில் கிடைக்கக்கூடிய நிலையினை ஏற்படுத்தவும் தங்களின் விசேட கவனம் மேலும் ஈர்க்கப்பட வேண்டுமென்று  கேட்டுக் கொள்வதாக வேழமாலிகிதன் அவர்களால் எழுதப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.