யாழில் தொற்றுக்குள்ளான மூவர்: தாய், மகன் மற்றும் சிறுமியான மகள்!

யாழ்ப்பாணத்தில் இன்று மேலும் மூன்று பேர் கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ள நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நேற்று தொற்றிற்கு இலக்கான மூவரும், அரியாலையில் சுவிஸ் போதகர் ஆராதனை நடத்திய தேவாலயத்திற்கு அருகில் வசிப்பவர்கள் என்பதுடன் தேவாலயத்துடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தாய், மகன் மற்றும் மகள் ஆகியோர் தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர் என யாழ். போதனா வைத்தியாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேற்படி மூவரும் அரியாலை முள்ளி வீதியைச் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 36 வயதான தாயார், 20 வயதான மகன் மற்றும் 15 வயதுடைய மகள் ஆகியோரே தொற்றிற்கு இலக்காகியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அவர்களுடைய உடல்நிலை சாதாரணமாகவே காணப்படுவதாகவும் இருப்பினும் மேலதிக பராமரிப்புக்கும், சிகிச்சைக்கும், கண்காணிப்புக்கும் நாளை வெலிகந்த விசேட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் பணிப்பாளர் சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் 3 மூவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.