மாவையின் நிதி ஊடாண நிவாரணப் பணி மாவிட்டபுரத்தில் இன்று ஆரம்பமாகியது!
இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசா 5 லட்சம் ரூபாவை அன்றாடத் தொழில் மேற்கொண்டு நாட்டின் அசாதாரணசூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிக்காக தனது சொந்த நிதியில் ஒதுக்கியிருந்தார்.
இந்த நிவாரணப் பணியின் முதல் கட்ட வழங்கல் நிகழ்வு இன்று மாவிட்டபுரத்தில் நடைபெற்றது. இந்த நிவாரணப் பொதிகளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசாவும், வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதி செயலாளருமாகிய சோ.சுகிர்தன் ஆகியோர் இணைந்து வழங்கிவைத்தனர்.
கருத்துக்களேதுமில்லை