மக்களுடன் முரண்பாடாக நடந்த சமுர்த்தி உத்தியோகத்தர் குறித்து விசாரணை- யாழ். அரச அதிபர்

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சமூர்த்தி உத்தியோகத்தர் பொதுமக்களுடன் முரண்பாடாக நடந்துகொண்டு மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியிருப்பதாக தனக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

குறித்த முறைப்பாட்டை  விசாரணை செய்து அறிக்கையிடும்படி மாவட்ட சமூர்த்திப் பணிப்பாளரை கோரியுள்ளதாகவும், விசாரணை முடிவில் குறித்த  உத்தியோகத்தர் முறைகேடாக நடந்திருந்தால் அதற்குரிய தண்டனை வழங்குவதற்கும் பணித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை இடம்பெறும் இந்தக் காலகட்டத்தில் தற்காலிகமாக குறித்த சமூர்த்தி உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யும்படியும் மாவட்ட சமூர்த்திப் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளதாக அரசாங்க அதிபர் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.