குணமடைந்தனர் மேலும் இரு நோயாளிகள் ..!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 நோயாளிகள் குணமடைந்தனர் என்றும் இதன் காரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

இதேவேளை இன்று மேலும் மூன்று பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் நேற்று முதல் 11 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் 03 பேர் யாழ்ப்பாணம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்டதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் 02 பேர் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இதில் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மற்றுமொருவர், புத்தளம் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து அடையாளம் காணப்பட்டதோடு, மேலும் ஒருவர் சிலாபம் பிரதேசத்தில் வைத்து அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வெளிநாட்டவர்களுடன் நெருக்கமாக செயற்பட்ட மேலும் ஒருவர் இதில் அடங்குவதோடு, களுத்துறை பிரதேசத்தில், மூடப்பட்ட பகுதியிலிருந்து அடையாளம் காணப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவரும் இதில் உள்ளடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், அக்குரணை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்புடைய இருவர் ஆகிய 11 பேர் நேற்றும் இன்றும் அடையாளம் காணப்பட்ட நபர்கள் என, அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.