அன்ரனி ஜெயநாதன் அறக்கட்டளையாள் உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு..!

வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக “அன்ரனி ஜெயநாதன்” அறக்கட்டளையின் நிதி பங்களிப்பில் முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியினால் அன்ரனி ஜெயநாதன் பீற்றற் இளஞ்செழியன் தலைமையில் தொடர்ந்து உலர் உணவு பொதிகள் வழங்கி வருகின்றனர்.
தற்போது covid 19 வைரஸ் தொற்று நோயினால் மக்கள் பெரும் பிரச்சனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ் நிலையில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக “அன்ரனி ஜெயநாதன்” அறக்கட்டளையின் நிதி பங்களிப்பில் முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியினால் 28.03.2020 அன்று ஒரு இலட்ஷத்தி ஐம்பதாயிரம் ரூபாய்  (150000.00) பெறுமதியான உலர் உணவு பொதிகளை 125 குடும்பங்களுக்கும், 31.03.2020 அன்று ஒரு இலட்ஷத்தி இருபதாயிரம் ரூபாய் (120000.00)  பெறுமதியான 100 உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்திருந்தனர்.
தற்போது தொடர்ந்து நாட்டில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுலில் உள்ளதினால் பல பகுதியில் அன்றாடம் உழைத்து வாழ்க்கையை போக்கும் 2,3 வயது  சிறுவர்கள் அடங்கிய குடும்பத்திற்கும் விசேட தேவையுடையோருக்குக்கும் அவர்களது நலன் கருதி இரண்டு இலட்ஷத்தி அறுபத்தி ஐயாயிரத்து ஐநூறு ரூபாய் (265000.00) பெறுமதியான   225 உலர் உணவு பொதிகளை  2,3,4.04.2020 ஆகிய தினங்களில்  “அன்ரனி ஜெயநாதன்” அறக்கட்டளையின் நிதி பங்களிப்பில்  முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியினால்  அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன்  தலைமையில்  வழங்கி வைக்கப்பட்டது.
இவ் உலர் உணவு பொதிகள் கொக்கு தொடுவாய் மேற்கு, கொக்கு தொடுவாய் மத்தி, கொக்கு தொடுவாய் வடக்கு, செம்மலை, நாயறு (செம்மலை கிழக்கு), உப்புமாவெளி, அளம்பில் வடக்கு, சிலாவத்தை தெற்கு, கள்ளப்பாடு வடக்கு, முல்லைத்தீவு தெற்கு, வண்ணாங்குளம், மணற்குடியிருப்பு, கோவில்குடியிருப்பு, முல்லைத்தீவு நகரம்,சிலாவத்தை, முள்ளிவாய்க்கால் கிழக்கு, செல்வபுரம் ஆகிய  கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி பொதிகளை  மாவட்ட மேலதிக செயலாளரின் அனுமதியுடன் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர், கிராம சேவகர்களின் ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.