கொழும்பில் காற்றின் தரம் உயர்வு!

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் கொழும்பு நகரில் காற்று மற்றும் நீர் மாசு குறைவடைந்துள்ளது.

அமெரிக்க தூதரகத்தின் தரக்குறியீட்டிற்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.

வாகனப் போக்குவரத்து குறைவடைந்தமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர் H.S.பிரேமசிறி குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு முன்னரான நிலையுடன் ஒப்பிடுகையில் வளி மாசடைவு பாரியளவில் குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் காற்று மாசு கடந்த நவம்பர் மாதத்தில் பாரியளவில் அதிகரித்துக் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.