நாடளாவிய ரீதியில் மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளது!

நாடளாவிய ரீதியில் மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகமானோர் தங்களது வீடுகளிலேயே இருப்பதனால் மின்சாரத்திற்கான தேவை 30 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு மற்றும் ஏனைய நகரங்களில் உள்ள சில நிறுவனங்கள் மூடப்பட்டதே இதற்கு காரணம் எனவும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.