அதிகளவு நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட மாவட்டம் கொழும்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அதிகளவு நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட மாவட்டமாக கொழும்பு பதிவாகியுள்ளது.

இன்றய நிலவரப்படி கொழும்பில் 42 பேரும் புத்தளத்தில் 27 பேரும் களுத்துறையில் 25 பேரும் கம்பஹாவில் 11 பேரும் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்தோடு யாழ்ப்பாணத்தில் 07 பேரும் கண்டியில் 06 பேரும் இரத்தினபுரியில் 03 பேரும் குறுநாகலில் 02 பேரும் காலி, கேகாலை, மட்டக்களப்பு மற்றும் பதுளை, மாத்தறை பகுதிகளில் தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட மாநிலங்களில் 35 பேரும் அடங்குவதாகவும் இதில் 3 வெளிநாட்டவர்கள் உள்ளடங்குவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.