ஊரடங்கு உத்தரவை மீறிய மேலும் 1, 245 பேர் சிக்கினர் – இதுவரை 13,468 பேர் கைது
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்குச் சட்ட உத்தரவை மீறிய ஆயிரத்து 245 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, கைதானவர்களிடமிருந்து 336 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களில் மொத்தமாக 13 ஆயிரத்து 468 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் காலப்பகுதியில் 3 ஆயிரத்து 353 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை