கொரோனா வதந்தி: பெண் ஒருவர் கைது

கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களைப் பிரசாரப்படுத்திய பெண்ணொருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்தப் பெண் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் பணிப்பாளராகக் கடமையாற்றி வருபவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கொரோனா வைரஸ் மற்றும் அது சம்பந்தமான விடயங்கள் தொடர்பாக பொய்யான தகவல்களைப் பரப்பும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.

இதனடிப்படையில், முகநூல் உட்பட சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை வெளியிட்ட சிலர் அண்மையில் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.