மாத்தளை நகரிலும் கொரோனா நோயாளர் விடுதி திறந்து வைப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாத்தளை பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட நோயாளர் விடுதி இன்று திறந்து வைக்கப்பட்டது.

வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அசேல குமார தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

மாத்தளையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்த விடுதியில் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.