பி.எச்.ஐ. மீது கத்திக்குத்து: 16 வயது சிறுவன் கைது!!

ரம்புக்கணை, பத்தம்பிட்டிய பிரதேசத்தில்  கொரோனா வைரஸ் ஒழிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொதுச் சுகாதார பரிசோதகரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சந்தேகநபரான 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (04) பிற்பகல் 3.00 மணியளவில், ரம்புக்கணை, பத்தம்பிட்டிய பிரதேசத்தில்  பணியில் ஈடுபட்டிருந்த ரம்புக்கணை, பொதுச் சுகாதார அலுவலகத்தில் பணிபுரியும் பொதுச் சுகாதார பரிசோதகர் மீது குறித்த சந்தேகநபர் கூரிய ஆயுதத்தால் தாக்குதலை நடாத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த பொதுச் சுகாதார பரிசோதகர் ரம்புக்கணை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவரது பணிக்கு இடையூறு விளைவித்து, அவரைக் கத்தியால் தாக்கி காயப்படுத்தியமை தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததோடு, அவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

அதற்கமைய, இன்று (05) பிற்பகல் 3.30 மணியளவில் ரம்புக்கணை பொலிஸ் பிரிவிலுள்ள ஹீனாபோவ பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் கடிகமுவவில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ள்ளார்.

சந்தேகநபர், நாளை (06) மாவனல்லை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். மேலதிக விசாரணைகளை ரம்புக்கணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்