19 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது..!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி  மற்றும் யாழ்ப்பாணம்  உள்ளிட்ட ஆறு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை தளர்த்தப்பட்டது.

அத்தியாவசிய மற்றும் மருத்துவ பொருட்களை பெற்றுக்கொள்ள வழங்கப்படும் காலத்தில் சுகாதார ஆலோசனைகளை  பின்பற்றி மக்கள் செயற்படுங்கள் என அரசாங்கம் அறிவுறுத்துகின்றது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களை மக்கள் பெற்றுகொள்ள வேண்டும் என்பதற்காக ஊரடங்கு உத்தரவு 08 மணி நேரங்களுக்கு தளர்த்தப்படுகின்றது.

இதில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்கள் தவிர்ந்து ஏனையே 19 மாவட்டங்களுக்கு இன்று காலை 6 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் தளர்க்கப்பட்டாலும் கூட ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு பயணிக்க முடியாது எனவும் அத்தியாவசிய தேவை தவிர்ந்து ஏனைய எந்தவொரு தேவைக்காகவும் எவரும் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிவித்துள்ளது.

அதனையும் மீறி எவரேனும் சட்டதிட்டங்களுக்கு முரணாக செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க ஜனாதிபதி அனுமதியையும் வழங்கியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.