கல்முனை பிராந்தியத்தில் உள்ள 150 குடும்பங்களுக்கு ஷைனிங் விளையாட்டுக்கழகத்தினரின் கோரிக்கைக்கு அமைவாக சந்திரசேகரம் ராஜன் அவர்களின் ஏற்பாட்டில் நிவாரணப் பொருள் வழங்கிவைப்பு…

கொரோனாவின் காரணமாக இலங்கையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தினக்கூலிக்கு வேலைக்கு செல்லும் குடும்பங்களில் உணவுத் தேவை மேலும் அதிகரித்துள்ளது.

இதன் தாக்கத்தினை குறைக்கும் முகமாக ஷைனிங் விளையாட்டுக்கழகத்தினரினால் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு பிரதி வைத்திய அத்தியட்சகர் dr.இராஜேந்திரன், வைத்திய நிபுணர் Dr.உதயகுமார் மற்றும் மகப்பேற்று வைத்தியர் Dr.ரஷிட் முகமது அவர்களின் அவர்களின் பங்களிப்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் அவர்களின் அனுசரணையில் 150 நிவாரணப்பொதிகள் ஷைனிங் விளையாட்டுக்கழகத்தியனாருக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது.

இவ் நிவாரணப்பொதிகள் கல்முனை பிரதேச வறுமைக்கோட்டிற்குட்பட்ட நாளாந்தம் கூலி வேலை செய்கின்ற குடும்பங்கள் 150 பேருக்கு வழங்கிவைக்கப்பட்டது.

இதற்கான அனுசரணை மற்றும் ஏற்பாடு செய்து தந்த அனைவருக்கும் ஷைனிங் விளையாட்டுக்கழகத்தினர் தங்கள் நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றனர்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.