யாழில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள ஒருதொகுதி மக்களுக்கு சீ.வீ.கே. உதவி

கொரோனா தொற்று நோயின் தாக்கத்தினால் யாழ்ப்பாணம் மாவட்டம் பூராகவும் தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படிருக்கும் நிலையில் அன்றாடம் உழைத்து வாழும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கும் முகமாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும், வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தனது சொந்த நிதியத்தில் இருந்து ஒரு இலட்சத்து தொண்நூற்று ஆறாயிரம் (196,000) ரூபாய் பணத்தினை வழங்கியுள்ளார்.

இதன்படி, இருபாலை தெற்கு கிராமம், தாவடி ஆசாரியார் வீதியில் உள்ள ஒரு பகுதி, வலிகாமம் வடக்கின் ஒரு பகுதிக்கு தலா 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், கோண்டாவில் நாராயணன் பகுதி, கொட்டடி கற்குளம் பகுதிக்கு தலா இருபதாயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களை வழங்கிவைத்துள்ளதுடன் அடையாளப்படுத்த முடியாத சில குடும்பங்களுக்கு முப்பத்து ஆறாயிரம் ரூபாயினை பணமாக வழங்கி வைத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.