நீண்ட நாட்களுக்குப் பின்னர் தளர்த்தப்பட்ட ஊரடங்கு: கிளிநொச்சியில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்!

இலங்கையின் 19 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் அத்தியாவசியப் பொருள் கொள்வனவில் இன்றும் ஈடுபட்டனர்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் இன்று (திங்கட்கிழமை) ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் மக்கள் கொள்வனவு மற்றும் வங்கி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அங்கு வங்கிகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து சேவைகளைப் பெற்றுக்கொண்டனர்.

முறையான அணுகுமுறை மற்றம் சுகாதார பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதுடன் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்