மாவையின் நிதியில் வடமராட்சி மக்களுக்கு உதவி!

மாவை சோ.சேனாதிராசாவின் நிதியிலிருந்து வடமராட்சி பகுதியிலுள்ள பருத்தித்துறை, குடத்தனை, அம்பன், நாகர் கோவில், செம்பியன் பற்று, தாளையடி, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, உடுத்துறை ஆகிய பிரதேசங்களிலுள்ள 300 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசாவுடன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொருளாளர் பெ.கனகசபாபதி, வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தன், வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன், வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களான சே.கலையமுதன், லயன் செ.விஜயராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்