இன்றுவரை ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் சம்மாந்துறை பொலீஸ் பிரிவில் 79 பேர் கைது மற்றும் 60 வாகனங்கள் பறிமுதல்!!!
ஊரடங்குச் சட்டத்தை மீறி குற்றச்சாட்டில் சம்மாந்துறை பொலீஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் (22/03) ஆம் திகதியிலிருந்து இன்றுவரை (06/04) எல்லாமாக 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் ஊரடங்கு காலப்பகுதியில் காரணங்கள் எவையுமின்றி வீதிகளில் நடமாடினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் பயணித்த வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலீஸ்நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத் தமிழ் சி.என்.என். இணையத்துக்குத் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை