கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – பிரத்தியேகமான சந்தைகள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் சுற்றிவளைப்புகள்

பாறுக் ஷிஹான்

கொரோனா வைரஸ் பரவலையடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் திங்கட்கிழமை(6)  கிழக்கு மாகாணத்தில்  காலை 6 மணி முதல் நண்பகல் 2 மணி வரை தளர்த்தப்பட்டிருந்தது.

இதன் போது மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட எல்லையினை ஊடறுத்து வியாபார நோக்கத்திற்காகவும் அத்தியவசிய தேவைகளுக்காகவும் கல்முனை மாநகரை நோக்கி வருகை தரும் மக்களுக்கு பெரிய கல்லாறு பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனை சாவடியில் கொரோனா வைரஸ் கிருமி அழிப்பு மருந்து இராணுவ வீரர்களினால் விசுறப்பட்டுகிறது.

குறிப்பாக மக்களின் வாகனங்கள் அவர்களின் சில உடமைகளுக்கு குறித்த மருந்து தெளிக்கப்பட்டு சோதனையின் பின்னர் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

மேலும் பாஸ் அனுமதி இன்றி வேறு மாவட்டங்களிற்கு   வியாபார நடவடிக்கைக்கு சென்றவர்கள் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.