மந்திகைக்கு கொண்டுசெல்லப்பட்டவர் உயிரிழப்பு – கொரோனா இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது!

மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த பருத்தித்துறைவாசிக்கு கொரோனா தொற்று இல்லை என ஆய்வுகூடப் பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பருத்தித்துறையைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவர் கடந்த பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி கம்போடியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளார்.

இன்று அதிகாலை 2 மணிக்கு மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

அவர் ஆஸ்துமா நோயாளி. கடந்த மூன்று நாள்களாக அவருக்கு காய்ச்சல், தடிமன் உள்ளிட்டவை காணப்பட்டதால் இன்று அதிகாலை மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். எனினும் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிவதற்கு மாதிரிகள் பெறப்பட்டு கோரோனா தொற்று பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

எனினும் அவருக்கு கோரோனா வைரஸ் தொற்று இல்லை என பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ளது” என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.