யாழில் ஊரடங்கை மீறிய 40 பேர் கைது
யாழ். மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்ட 40 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 10 பெண்களும் 30 ஆண்களும் உள்ளடங்குகின்றனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை