கைதி ஒருவருக்குக் ‘கொரோனா’ 30 பொலிஸார் தனிமைப்படுத்தல்

ஜா- எல, பமுனுகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 30 உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பமுனுகம – தெலபுர பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதன் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சுகவீனமடைந்ததன் காரணமாக ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பமுனுகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 30 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் பொலிஸ் நிலையத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பமுனுகம பொலிஸ் நிலையத்தில் கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.