குடும்பத்தகராறு காரணமாக காரைதீவு12 இல் ஒருவர் தூக்கில் தொங்கித் தற்கொலை!

சம்மாந்துறை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட காரைதீவில் குடும்பத்தகராறு காரணமாக நபர் ஒருவர் தூக்கில் தொங்கித் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் இன்று (07) அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.

சனசமூக வீதி காரைதீவு12 வசித்துவந்த 42வயது நிரம்பிய கிருஸ்ணபிள்ளை தட்சணாமூர்த்தி (கண்ணன்) என்ற 3 ஆண் பிள்ளைகள் 2 பெண் பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்ற நிலையில். சம்பவ இடத்திற்கு காரைதீவு தவிசாளர் ஜெயசிறில் ,பிரதேச சபை உறுப்பினர்களான மோகன்தாஸ், காண்டிபன் மற்றும் ஜெயராணி ஆகியவர்கள் வருகைதந்து நிலைமைகளை கண்டறிந்தனர்.

இதன் போது தவிசாளர் ஜெயசிறில் அவர்களினால் விசாரணைகளை துரிதமாக முன்னெடுத்து குடும்பத்தினருக்கு உதவி செய்யுமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.