ஊரடங்கை மீறிக் கைதானோர் எண்ணிக்கை 16,124ஆக உயர்வு

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்துகொண்ட குற்றச்சாட்டில் 16 ஆயிரத்து 124 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 4 ஆயிரத்து 64 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்குச் சட்டம், கடந்த 20ஆம் திகதி மாலை 6 மணி முதல் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. அன்று தொடக்கம் இதுவரையான காலப்பகுதியினுள்ளேயே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.

இதற்கமைய, இன்று (07) காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையான கடந்த 06 மணித்தியால காலப்பகுதியினுள் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 222 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இக்காலப்பகுதியில் 73 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.