மேலும் நால்வர் வீடுகளுக்கு; 132 பேர் வைத்தியசாலையில்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதற்கமைய இதுவரை 42 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதுவரை 06 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஏனைய 132 நோயாளிகளும் கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலை, முல்லேரியா ஆதார வைத்தியசாலை மற்றும் வெலிக்கந்த ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், நாட்டிலுள்ள 30 வைத்தியசாலைகளில் 257 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.