கிளிநொச்சி மாவட்டத்தில் கர்ப்பவதிகளுக்கான சுகாதாரத் துறையினரின் அறிவிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கர்ப்பவதிகள் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளபோது சிகிச்சை பெற நேரிட்டால் வீடுகளில் இருந்துவிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இக்காலத்தில் அம்பியூலன்ஸ் வண்டி சேவைக்கு (1990) அல்லது தங்கள் பிரிவுகளில் உள்ள குடும்ப நல உத்தியோகத்தகர்களுடன் தொடர்பு கொண்டு வைத்தியசாலைக்குச் செல்வதற்கான உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட சுகாதார துறையினனர் அறிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில் ஊரடங்கு வேளையில் சிறுவர்கள், பிரசவத்தின் பின்னரான தாய்மார்கள் மற்றும் கர்ப்பவதிகள் எவருக்காவது காய்ச்சல் அல்லது வேறு நோய் நிலை ஏற்பட்டால் உடனடியாகத் தத்தமது பகுதி பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்களை தொடர்புகொண்டு அரச வைத்தியசாலைகளுக்குச் செல்வதற்கான போக்குவரவு உதவிகளைப் பெற்றிடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கை காரணமாக கொண்டு வைத்தியசாலைகளுக்குத் தாமதமாக சென்ற பொதுமக்கள் சிலர் தற்போது கடுமையாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தகவல்கள் வெளியானதை அடுத்து இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை