இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது ஒருதொகை மருந்து

இலங்கையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்கியுள்ளது.

இதற்கமைய 10 தொன் அளவுடைய மருந்து பொருட்களை இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது.

குறித்த மருந்து பொருட்கள் விமானம் மூலம் நேற்று(செவ்வாய்கிழமை) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சஜித் தரப்பினரை சந்தித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த விடயத்தினைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.