வெளிநாட்டில் வாழும் இலங்கையரை ஒருபோதும் கைவிடவேமாட்டாது அரசு – இப்போது நாடு திரும்ப சந்தர்ப்பம் இல்லை என்கிறார் மஹிந்த

கொரோனா வைரஸைத் தொடர்ந்து வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் தொடர்பில் அரசு தீவிர அவதானத்தில் உள்ளது எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நேற்று தெரிவித்தார்.

பொறுப்புள்ள அரசு என்ற ரீதியில் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் ஒருவரையும் தனிமைப்படுத்தமாட்டோம் எனவும் அவர் உறுதியளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களை சர்வதேசத்தின் உரிய முறைக்கமைய நாட்டுக்கு அழைத்து வருவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்ட பின்னர் அவர்களை அழைத்து வருவோம்.

இத்தாலி சுற்றுலா கப்பலில் சிக்கியிருந்த இலங்கை இளைஞர் விடுத்த கோரிக்கைக்கமைய அவரைக் கடற்படையினர் மீட்டெடுத்தனர்.

சமகால நெருக்கடி நிலையில் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்ப எதிர்பார்க்கின்றார்கள். ஆனால், அதற்கான சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும். சர்வதேச பாதுகாப்பு முறைக்கமைய அவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும்.

உலகின் தற்போதைய நிலைமைக்கமைய உடனடியாக அனைத்து இலங்கையர்களையும் அழைத்து வருவதற்கான சந்தர்ப்பம் இப்போது இல்லை” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.