பத்து தொன் மருந்துப் பொருட்கள் இலங்கைக்கு இந்தியா அன்பளிப்பு
கொரோனா வைரஸ் நெருக்கடி நிலையைக் கருத்தில்கொண்டு 10 தொன் அத்தியாவசிய உயிர் காப்பு மருந்துகளை இலங்கைக்கு இந்திய அரசு வழங்கியுள்ளது.
இலங்கை அரசின் கோரிக்கைக்கு அமைவாக இந்த மருந்துப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தத் தொகுதி மருந்துப்பொருட்கள் ஏர் இந்தியா விசேட விமானம் மூலமாக நேற்று இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன.
கருத்துக்களேதுமில்லை