அவசியக் கோட்பாட்டு சட்டம் அவசியமில்லை – சுமந்திரன்

நாட்டில் தேர்தல் உட்பட சட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசியலமைப்பில் தேவையான ஏற்பாடுகள் இருப்பதனால் அவசியக் கோட்பாட்டு சட்டத்தை பிரயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர், அவசர கோட்பாட்டு சட்டம் என்பது எவ்வித வழியும் இல்லாத சந்தர்ப்பத்தில் பயன்படுத்தப்படுவது என்பதை சுட்டிக்காட்டிய அவர் தற்போதைய நிலையில் அவசர கோட்பாட்டு சட்டத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என கூறினார்.

ஆகவே தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைக்கு தீர்வுகாண்பதற்கு அரசியலமைப்பில் தேவையான ஏற்பாடுகள் இருக்கின்றது என்றும் தெரிவித்தார்.

அதன்படி இந்நிலையில் தற்போது எழுந்துள்ள சட்டரீதியான பிரச்சினைக்கு பிரச்சினைக்கு 707 என்ற பிரிவின் மூலம் நாடாளுமன்றத்தை கூட்ட முடியும் என தெரிவித்த அவர், எனவே அவரச கோட்பாட்டு சட்டத்தை பிரயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை என மீண்டும் வலியுறுத்தினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.