அம்பாறை,அக்கரைப்பற்றில் கொரோனாவைரஸ் முதல் தொற்றாளர் அடையாளம்: நேரடிக்களத்தில் Dr.ஜி.சுகுணன்
அம்பாறை மாவட்டத்தில் கொரோனாவைரஸ் தொற்று அறிகுறியுள்ள ஒருவர் முதன்முறையாக அக்கரைப்பற்று, காசிம் ஆலிம் வீதி பள்ளி பக்கத்தில் 56 வயது உடைய குறித்த நபருக்கே கொரோனாவைரஸ் தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் கட்டார் நாட்டுக்கு சென்று வருகை தந்த இவருக்கு கொரோனா தொற்றியிருப்பது மருத்துவ பரிசோதனைகளில் தெரியவந்ததாக கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிப்பாளர் Dr.ஜி.சுகுணன் Tamilcnn ஊடகபிரிவுக்கு தெரியபடுத்தினார்.
இவர் சிகிச்சைக்காக வெலிக்கந்தைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளார். இவர் முன்னதாக வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் என்பதுடன். தனிமைப்படுத்தல் 14 நாட்கள் கழிந்த பின்னரே இவருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
தனிமைப்படுத்தல் முடிந்து வீடு திரும்பிய இவர் பலருடன் பழகி இருப்பதால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க சுகாதார தரப்பு தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது. இவருடன் கட்டார் சென்று திரும்பிய மேலும் 7 பேர் தொடர்பிலும் ஆராயப்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை