கைதிகளுக்கு பிணை வழங்குவது தொடர்பாக சட்ட மா அதிபர் பரிந்துரை!

போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு பிணை வழங்குவது தொடர்பாக சட்ட மா அதிபர் தப்புல டி லிவேராவால் பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பதில் பொலிஸ் மா அதிபருக்கு இந்த பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் கைதிகளுக்கு பிணை வழங்குவது தொடர்பாக 5 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

13 ஆயிரத்திற்கும் அதிகமான விளக்கமறியல் கைதிகளில் 8 ஆயிரம் பேர் வரை போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என சட்ட மா அதிபரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இவர்களுக்கு பிணை வழங்கும் முன்னர் தமது பரிந்துரைகளை பின்பற்றுமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.